×

இலங்கையைச் சேர்ந்த அங்கொட லொக்கா மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை!

கோவை:  இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா கோவையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அங்கொட லொக்காவின் இறப்பு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையில் போதைப்பொருள் கடத்தும் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா ஆவார். கடந்த 2017ம் ஆண்டு இலங்கையின் மற்றொரு தாதாவான அருண் தாமித் உள்ளிட்ட கும்பலை போலீசார் வண்டியில் ஏற்றி சென்றனர். அப்போது அங்கொட லொக்கா மாபெரும் துப்பாக்கி சூடு நடத்தி அந்த தாதாவை தப்பிக்க வைத்துள்ளார்.

இதனை அறிந்த இலங்கை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து அங்கொட லொக்கா தமிழத்தில் நடமாடுவதாக தகவல் வெளியானது. அதிலும் சென்னை, கோவை, பெங்களூரு, மதுரை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடமாடுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 3ம் தேதி  இவர் பெங்களூரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வில்லை. ஏனெனில் அதிகாரபூர்வ தகவலை தரவேண்டும் என கூறியுள்ளது. இதக்கிடையில் மதுரையில் சிவகாமி சுந்தரி என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவர் சில நாட்களுக்கு முன்பு தந்து உறவினர் பிரதீப் சிங் என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் சுந்தரி புகார் அளித்துள்ளார். அப்போது பிரதீப் சிங்கின் ஆதார் கார்டையை போலீசாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் பிரதீப் சிங் என்பவர் அங்கொட லொக்கா என்பவரின் போலியான ஆதார் கார்டு என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் இலங்கையில் தேடப்படும் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்  கடந்த ஜூலை 3ம் தேதி  இவர் பெங்களூரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போலி ஆவணங்களை தயார் செய்யும் சிவகாமி சுந்தரியும், திருப்பூரில் வசித்து வரும் தியானேஷ்வரன் மற்றும் அங்கொட லொக்காவுடன் வசித்து வந்த அமானி தான்ஜி ஆகிய 3வரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கோவையில் கைது செய்யப்பட்ட அமானி தான்ஜி என்ற பெண், அங்கொட லொக்காவின் காதலி என்று தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அமானி தான்ஜிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன அழுத்தம் காரணமாக அவரது கரு கலைந்துவிட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர். இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள மதுரை சிவகாமி சுந்தரி வழக்கறிஞர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தாதா கும்பலுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டாரா? போன்றவை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கினை விசாரிக்க சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.  இதனையடுத்து 2 துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 7 பேர் குழு கோவையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,CBCID ,Angoda Lokka ,Sri Lanka , CBCID probe,Sri Lankan, Angoda Lokka,
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...